சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆதி என்ற ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜமங்கலத்தை சேர்ந்த ரவுடி ஆதி, தனது மனைவியை பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்த்திருந்தார். மனைவியை பார்க்க வந்த ரவுடியை ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடினர்.
