‘பராசக்தி’ படம் வெளியானது தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, பசில் ஜோசப், ராணா டகுபதி, சேத்தன், பிரகாஷ் பெலவாடி, குரு சோமசுந்தரம், சந்தியா மிருதுள், குலப்புள்ளி லீலா நடிப்பில் நேற்று திரைக்கு வந்த படம், ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் இன்பன் உதயநிதி வெளியிட்டார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள 100வது படம், சிவகார்த்திகேயன் நடித்துள்ள 25வது படம் என்ற சிறப்பை பெற்றுள்ள இப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் யு/ஏ 16+ என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று உலகம் முழுவதும் ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் வெளியானது.

தமிழகத்தில் கூடுதலாக ஒரு சிறப்புக்காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், காலை 9 மணிக்கே ‘பராசக்தி’ படத்தின் முதல் காட்சி தொடங்கியது. தியேட்டர் வாசலில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.

சென்னையிலுள்ள ஒரு திரையரங்கில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, துருவ் விக்ரம், சூரி, ஷாலினி அஜித் குமார் ஆகியோர் ரசிகர்களுடன் அமர்ந்து ‘பராசக்தி’ படத்தை பார்த்து ரசித்தனர். குரோம்பேட்டையிலுள்ள ஒரு திரையரங்கில் சிவகார்த்தியேன் மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா படம் பார்த்தனர். கே.கே.நகரிலுள்ள ஒரு தியேட்டரில் ரவி மோகன் படம் பார்த்தார்.

Related Stories: