குடும்ப அட்டைதாரர்களிடம் கையெழுத்து பெற்று பொங்கல் தொகுப்பு தர மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை:
தமிழர் திருநாள் தைப்பொங்கல் பரிசு தொகுப்பு – 2026 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான வழிமுறையான கையடக்க மின்னணு கணினி மூலம் கைரேகை பதிவு செய்து வழங்க வேண்டி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இப்பணி நடைபெறுவதால் இணையதள சேவை முழுமையாக கிடைப்பதில் தடங்கல் இருப்பதால் காலதாமதம் ஆகிறது. எனவே, துரிதப்படுத்த இணைய சேவைத்திறனை அதிகரிக்கவும், தொழில்நுட்ப கோளாறுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். இத்திட்டத்தினை விரைந்து அமலாக்க குடும்ப அட்டைதாரர்களிடம் கையெழுத்து பெற்று பொங்கல் தொகுப்பை வழங்க அரசு உடனடியாக திட்டமிட வேண்டும்.

Related Stories: