இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிரான 4 நாள் போரில் பாகிஸ்தான் ஜேஎப்-17 தண்டர் போர் விமானத்தை பயன்படுத்தியது. இந்த விமானம் சீனா-பாகிஸ்தானின் கூட்டு தயாரிப்பாகும். இந்த விமானம் மூலம் இந்தியாவின் ரபேல் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் சென்றிருந்த வங்கதேச விமானப்படை தலைமை தளபதி, ஜேஎப்-17 போர் விமானத்தை வாங்க ஆர்வம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஜாகீர் அகமது பாபிர் சித்து, ஈராக் சென்றுள்ளார். அங்கு ஈராக் விமானப் படை தலைமை தளபதி மொகனத் காலிப் முகமது ரதி அல் அசாதியும் ஜேஎப்-17 போர் விமானத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் விடுத்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
