கரூர்: தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நேற்று கரூரில் அளித்த பேட்டி: தவெக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து சமீப காலமாக ஆதரவாக பேசி வருகிறார்கள். தேர்தல் நெருங்குவதால் இதுபோன்ற யுத்திகளை கையாள்வது ஒன்றும் புதிதல்ல. என்னை பொறுத்தவரை இந்த நிமிடம் வரை திமுக தலைமையிலான கூட்டணி தொடர்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தவெக என தனித்தனி கூட்டணியாகவும், நாம் தமிழர் தனித்து நிற்கும்.4 அணிகளில் கட்சிகளும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது. ஆதலால் திமுக தலைமையிலான இந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதுகிறேன். எங்கள் கட்சியின் வளர்ச்சி குறித்த அங்கீகாரத்தை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் வரும் தேர்தலில் எங்களுக்கு தருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
