பள்ளிபாளையம், ஜன.10: கோமாரி நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்கும் வகையில், வீரப்பம்பாளையம் கிராமத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 40 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பள்ளிபாளையம் ஒன்றியம், வீரப்பம்பாளையம் கிராமத்தில், கால்நடை துறை சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது. கல்லங்காட்டு வலசு கால்நடை மருத்துவர் கௌதம், கால்நடைகளை பரிசோதித்து சிகிச்சையளித்தார். கொள்ளை நோயான கோமாரி அம்மை நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு, கிராமத்தில் 40 எருமை, மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதை அறிந்த கிராம மக்கள் ஆர்வத்தோடு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுச்சென்றனர்.
