நியூயார்க்: அமெரிக்காவில் ரூ.63 கோடி கோகைனுடன் 2 இந்திய டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். 2017ல் அமெரிக்கா சென்ற குர்பிரீத் சிங்(25), 2023ல் அமெரிக்கா சென்ற ஐஸ்வீர்சிங்(30) ஆகியோர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள்.
இண்டியானா மாகாணத்தின் புட்னம் பகுதியில் நடந்த சோதனையில் லாரியின் படுக்கை அறைக்குள் போர்வைக்குள் மூடி வைத்த அட்டை பெட்டிக்குள் 140 கிலோ கோகைனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் 1,13,000 அமெரிக்கர்களை கொல்ல முடியும் என்று அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
