×

தேவனூர்புதூரில் பேருந்து நிழற்குடை கட்ட கோரிக்கை

உடுமலை, ஜன. 7: உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் கிராமத்துக்கு தினசரி 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு தேவைகளுக்காக பேருந்து மூலம் நகர பகுதிக்கு சென்று வருகின்றனர். இங்கு உடுமலை- ஆனைமலை சாலை மற்றும் பொள்ளாச்சி சாலை என மூன்று சாலை சந்திப்பில் பேருந்து நிறுத்தம் உள்ளது. ஆனால் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று அவதிப்படுகின்றனர்.

அமர வசதி இல்லாததால் முதியோர், பெண்கள் சிரமப்படுகின்றனர். பேருந்து நிழற்குடை வேண்டும் என பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதாவது பேருந்து நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Devanurputhur ,Udumalai ,Udumalai-Anaimalai road ,
× RELATED அவிநாசியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு