×

இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன. 7: வெனிசுலா நாட்டின் மீது தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்கா வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தினார். இச்சம்பவத்திற்கு பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வரக்கூடிய நிலையில் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் குமரன் நினைவகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் மதுரோவை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்டச்செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புறநகர் மாவட்ட மாவட்ட செயலாளர் இசாக், துணைச்செயலாளர் மோகன், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

 

Tags : Tiruppur ,United States ,Venezuela ,President ,Nicolas Maduro ,Trump ,US government… ,
× RELATED அவிநாசியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு