×

காங்கயத்தில் போர்வெல் டிரில்லிங் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்

காங்கயம், ஜன. 7: காங்கயத்தில் போர்வெல் லாரி உரிமையாளர்கள் உதிரி பாகங்களின் விலை உயர்வால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலத்தடி நீர் பெறுவதற்காக ஆழ் குழாய்கிணறுகள் பணிக்காகவும் போர்வெல் இயந்திரங்களை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பயன்படுத்தப்படும் ‘பிட்’ எனும் உபகரணம் விலை உயர்வு காரணமாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

பிட்டு மற்றும் உதிரிபாகங்கள் விலை தற்போது வரலாறு காணாத அளவுக்கு உயர்வடைந்துள்ளது. இதனால் முன்பு செய்த போல குறிப்பிட்ட விலையில் பணிகளை செய்தால் நஷ்டம் ஏற்படும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

 

Tags : Borewell ,Kangayam ,
× RELATED அவிநாசியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு