உங்களது ராசி, நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் முருகன் கோயில்கள்

செவ்வாயின் அனுக்கிரகம் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்? செவ்வாயின் அதிதேவதை யாரென்றால், அது நம் முருகப் பெருமான் தான். தொடர்ந்து செவ்வாய் கிழமை தோறும் முருகனை வழிபட்டு வந்தால் செவ்வாயின் காரகத்துவம் அனைத்தும் நமக்கு கிட்டும்.

அவரவர் ராசி, நட்சத்திரங்களுக்குரிய அதிர்ஷ்டம் தரும் முருகன் கோயில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பயன்படுத்தி பலன் பெறுக.

12 ராசிகளின் முருகன் கோயில்கள்

1. மேஷம் – கொடைக்கானல் தாண்டிக்குடி பாலமுருகன் கோயில்

2. ரிஷபம் – சுவாமி மலை முருகன்

3. மிதுனம் – செவலூர் பூமிநாதர் கோயிலில் உள்ள முருகன் (பொன்னமராவதி அருகில்)

4. கடகம் – பழனி முருகன்

5. சிம்மம் – திருப்பரங்குன்றம் முருகன்

6.கன்னி – திருச்செந்தூர் முருகன்

7. துலாம் – வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள முத்துக்குமாரசுவாமி முருகன்

8. விருச்சிகம் – மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோயிலில் உள்ள முருகன் (திருச்சி அருகில்)

9. தனுசு – திருத்தணி முருகன்

10. மகரம் – வயலூர் முருகன், திருச்சி

11. கும்பம் – ஓரக்காட்டு பேட்டை குணம் தந்த நாதர் கோயிலில் உள்ள முருகன் (செங்கல்பட்டு அருகில்)

12. மீனம் – திருவக்கரை வக்ர பத்ரகாளி கோயிலில் உள்ள முருகன் (பாண்டிச்சேரி அருகில்)

27 நட்சத்திரங்களின் முருகன் கோயில்கள்

1. அஸ்வினி – பழனி முருகன் கோயில்

2. பரணி – பழமுதிர்சோலை முருகன் கோயில்

3. கார்த்திகை – வடபழனி முருகன் கோயில் சென்னை

4. ரோகிணி – திருச்செந்தூர் முருகன்

5. மிருகசீரிடம் – குன்றத்தூர் முருகன் கோயில்

6. திருவாதிரை – முத்துக்குமாரசுவாமி கோயில், பார்க்டவுன், சென்னை.

7. புனர்பூசம் – திருத்தணி முருகன் கோயில்

8. பூசம் – சிறுவாபுரி முருகன் கோயில்

9. ஆயில்யம் – சுவாமிமலை முருகன் கோயில்

10. மகம் – வட்டமலை முருகன் கோயில், காங்கேயம்

11. பூரம் – மருதமலை முருகன் கோயில்

12. உத்திரம் – சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்

13. ஹஸ்தம் – மயிலம் முருகன் கோயில்

14. சித்திரை – விராலிமலை முருகன் கோயில்

15.சுவாதி – தண்டாயுதபாணி திருக்கோவில், காந்திபார்க், கோவை

16. விசாகம் – சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிவன்மலை

17. அனுஷம்- ரத்தினகிரி முருகன் கோயில்

18. கேட்டை – குன்றக்குடி முருகன் கோயில்

19. மூலம் – கந்தக்கோட்டம் முருகன் கோயில், சென்னை

20. பூராடம் – அறுபடை முருகன் கோயில், பெசன்ட் நகர், சென்னை

21. உத்திராடம் – திருவல்லிக்கேணி முருகன் கோயில், சென்னை

22. திருவோணம் – கந்தசாமி முருகன் கோயில், புரசைவாக்கம், சென்னை

23. அவிட்டம் – மருதமலை முருகன் கோயில்

24. சதயம் – நங்கநல்லூர் முருகன் கோயில், சென்னை

25. பூரட்டாதி – திருச்செந்தூர் முருகன் கோயில்

26. உத்திரட்டாதி – குன்றத்தூர் முருகன் கோயில்

27. ரேவதி – திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயில்கள்.

Related Stories: