சென்னை: சென்னை எழும்பூரில் கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் 538 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் 538 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எழும்பூர் கோ ஆப்டெக்ஸ் அருகே கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
