புவனகிரி, ஜன. 6: புதுச்சத்திரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்முருகன்(44). இவர் கேரளாவில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவை உடைத்து அதிலிருந்து தங்க நெக்லஸ், தோடு, ஜிமிக்கி, மாட்டல் உள்ளிட்ட 6 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து அருள்முருகன் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
