கோதாவரி: ஆந்திராவின் கோதாவரி மாவட்டம்இருமண்டா கிராமத்தில் விளைநிலங்கள் வழியே செல்லும் ஓஎன்ஜிசி குழாயில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதால் பதற்றம் நிலவுகிறது. காற்றில் எரிவாயு நெடி பரவியதால் கிராம மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மக்கள் அளித்த தகவலின்பேரில் ஓஎன்ஜிசி தொழில்நுட்ப வல்லுநர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
