×

வங்கதேச போட்டிகளை இலங்கைக்கு மாற்ற முடிவு

 

துபாய்: வங்கதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களில் இந்து இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். இதற்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இரு நாடுகள் இடையே அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மானை, பிசிசிஐயின் அறிவுறுத்தல்படி அந்த அணி விடுவித்தது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியம் அடுத்த மாதம் தொடங்க உள்ள டி.20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு செல்லமாட்டோம். தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் போட்டிகளை மாற்றினால் டிவி ஒளிபரப்பாளர்கள், டிக்கெட் முன்பதிவு செய்துள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்று இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐசிசி தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஆலோசனை செய்து ஓரிரு நாளில் இறுதி முடிவை ஐசிசி எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனிடையே உலக கோப்பைக்கான வங்கதேச அணியின் கேப்டனாக இந்துவான லிட்டன்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே லிட்டன்தாசுக்கு எதிராக அந்நாட்டு ரசிர்கள் விமர்சனங்கள், மைதானத்தில் கோஷங்களை எழுப்பி வரும் நிலையில் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Tags : Bangladesh ,Sri Lanka ,Dubai ,India ,Mustafizur ,KKR ,IPL ,
× RELATED ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் வீழ்ந்தார் வீனஸ்