×

சில்லிபாயிண்ட்..

* 6, 6, 6, 4, 6, 6 பேர்ஸ்டோ மிரட்டல்
செஞ்சூரியன்: தென் ஆப்ரிக்காவில் நடந்து வரும் எஸ்ஏ20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் – பிரிடோரியா கேபிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பிரிடோரியா 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் குவின்டன் டி காக், ஜானி பேர்ஸ்டோ இணை ரன் மெஷினாக மாறி ரன் வேட்டையாடினர். டி காக் 41 பந்துகளில் 79 ரன்னும், பேர்ஸ்டோ 45 பந்துகளில் 85 ரன்களும் குவித்ததால், சன்ரைசர்ஸ், 177 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. கேஷவ் மகராஜ் வீசிய ஒரு ஓவரில், 6, 6, 6, 4, 6, 6 என 34 ரன்கள் விளாசி, பேர்ஸ்டோ சாதனை படைத்தார்.

* பிரிட்டிஷ் ஸ்குவாஷ் பைனலில் அனாஹத்
புதுடெல்லி: பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் அரை இறுதிப் போட்டியில் நேற்று, இந்தியாவை சேர்ந்த அனாஹத் சிங் (17), எகிப்து வீராங்கனை மலிகா எல் கராக்ஸி உடன் மோதினார். போட்டியின் துவக்கம் முதல் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய அனாஹத், 11-8, 11-7, 11-9 என்ற நேர் செட் கணக்கில் மலிகாவை வென்றார். இதன் மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் பிரான்சை சேர்ந்த, ஐரோப்பிய ஜூனியர் சாம்பியன் மற்றும் 2ம் நிலை வீராங்கனை லாரன் பால்டயன் உடன் அனாஹத் சிங் மோதுவார். அனாஹத், 9வது முறையாக பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

* விஜய் ஹசாரே கிரிக்கெட் தமிழ்நாடு அபார வெற்றி
மும்பை: விஜய் ஹசாரே கோப்பைக்காக மும்பையில் நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் தமிழ்நாடு – திரிபுரா அணிகள் மோதின. முதலில் ஆடிய தமிழ்நாடு, 50 ஒவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்தது. தமிழ்நாடு அணியின் ஆந்த்ரே சித்தார்த் 70, பாபா இந்திரஜித் 48, முகம்மது அலி 46 ரன்கள் விளாசினர். பின்னர், 260 ரன் இலக்குடன் திரிபுரா அணி களமிறங்கியது. தமிழ்நாடு அணியின் சிறப்பான பந்து வீச்சில் திணறிய திரிபுரா, 42.4 ஓவரில் 205 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால், 54 ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அபார வெற்றி பெற்றது. தமிழ்நாடு தரப்பில் குர்ஜப்நீத் சிங் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Tags : Chillipoint ,Bairstow ,Centurion ,Sunrisers ,Eastern Cape ,Pretoria Capitals ,SA20 ,South Africa ,Pretoria ,
× RELATED சில்லி பாய்ன்ட்…