திருச்சி: திருச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் 2வது நாளாக எஸ்.பி.வேலுமணி சந்தித்துள்ளார். அமித் ஷாவை நேற்று சந்தித்து பேசிய நிலையில் இன்று ஸ்ரீரங்கம் சென்று வந்த அமித் ஷாவுடன் வேலுமணி சந்தித்தார். திருச்சியில் அமித் ஷாவை சந்திக்க காலை முதலே காத்திருந்தார்.
அதிமுகவிடம் 50 தொகுதிகள் கேட்கும் அமித்ஷா
நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு குறைந்தது 50 தொகுதிகள் வேண்டும் என்று அமித் ஷா கேட்டதாக தகவல் வெளியாகியது. தொகுதி பங்கீடு மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக எடப்பாடியுடன் பேச்சு நடத்தவும் அமித் ஷா விருப்பம் தெரிவித்தார்.
அமித் ஷாவை சந்திக்க மறுத்த எடப்பாடி?
தொகுதி பங்கீடு பேச்சு நடத்த எடப்பாடி பழனிசாமி வராத நிலையில் அமித் ஷாவுடன் வேலுமணி மீண்டும் சந்தித்தார். பிரதமர் மோடி தலைமையில் தமிழ்நாட்டில் என்.டி.ஏ. ஆட்சி அமையும் என்று நேற்று அமித் ஷா பேசினார்.
எடப்பாடி பெயரை உச்சரிக்காத அமித் ஷா
பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித் ஷா கூறிய நிலையில் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பேசினார். புதுக்கோட்டை நிகழ்ச்சியில் கூட்டணியின் தலைவரான எடப்பாடியின் பெயரையே அமித் ஷா உச்சரிக்கவில்லை.
கூட்டணி ஆட்சியா? அதிமுக ஆட்சியா? – குழப்பம்
நேற்று அமித் ஷாவை வரவேற்க எடப்பாடி செல்லாத நிலையில் அதிமுக நிர்வாகிகள். பாஜக நிகழ்ச்சியை புறக்கணித்தனர். ஆட்சி தொடர்பான மாறுபட்ட கருத்தால் அதிமுக, பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அமித் ஷாவுடன் எஸ்.பி.வேலுமணி சந்தித்தார்.
