×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்க அழைப்பு: அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி

 

அவனியாபுரம்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரத்தில் தைப் பொங்கல் நாளன்று (ஜன.15) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதையொட்டி காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை, தகுதி சான்றிதழ் வழங்குதல், தடுப்புவேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வாடிவாசல் அமைப்பதற்கான முகூர்த்தக்கால் ஊன்றும் பணி சிவகுருநாத சுவாமி கோயில் முன்பு இன்று காலை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி கூறுகையில், ‘அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் டெண்டர் விடப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. வரும் 10ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக விழா மேடை, பார்வையாளர் கேலரி அமைக்கும் உள்ளிட்ட பணிகளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளனர்’ என்றார்.

Tags : AVANIAPURAM ,JALLIKKTAL ,MINISTER ,P. Murthy ,JALLIKKATHIL ,K. ,Stalin ,Deputy Chief Assistant Secretary ,Jallikatu ,Thai Pongal Day ,Madurai Avenue ,
× RELATED மதுரைக்கு வந்த முதல்வர்...