×

சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது..!!

சென்னை: சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் தொடக்கக் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சம்பளம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன்வைத்தனர். 2009ம் ஆண்டுக்கு முன்பாக நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் 2009க்கு பின்பாக நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையில் ஊதிய முரண்பாடு உள்ளது.

ஊதிய முரண்பாடுகள் கலைய வேண்டும் சம வேளைக்கு சம ஊதியம் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து சென்னை மட்டுமல்லாது பல இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் ஆசிரியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இதற்கான அறிவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிர்வாகிகளுக்கு அளிக்கப்பட்டது. அதன்படி நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் 4க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். போராட்டத்தில் முன்வைத்துள்ள கோரிக்கைகளை சங்கம் சார்ந்தும், ஆசிரியர்கள் சார்ந்தும் விரிவாக இயக்குநர்களிடம் முன்வைத்து வருகின்றனர்.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED இந்திய பெருங்கடலில் காற்றழுத்த...