×

தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறும் தேதி மாற்றம் செய்து தலைமை கழகம் அறிவிப்பு..!!

சென்னை: “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறும் தேதி மாற்றம் செய்துள்ளது. ஜனவரி-19 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் சிறப்புரையாற்றிட கழக முதன்மைச் செயலாளர் முன்னிலையில் கழக துணைப் பொதுச்செயலாளர் எம்.பி., தலைமையில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு 26.01.2026 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணி அளவில் நடைபெறும் என திமுக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிக்கையில்;
தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் மகளிர் மேம்ப்பாட்டுக்கென தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து, 1.31 கோடி மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, ‘விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம்’, கல்வி கற்கும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண் திட்டம்’, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி விடுதி’, இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கான சூழல் என மகளிர் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தலைமையில், கடந்த 29.12.2025 அன்று திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், “பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ” என்று சொல்லத்தக்க வகையில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்”தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கறுப்பு சிகப்பு மகளிர் அணி படையின் மாபெரும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து;

தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட – கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில், கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கலைஞர், எம்.பி., தலைமையில்; கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, முனைவர் க.பொன்முடி, திருச்சி சிவா, எம்.பி., ஆ.இராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – கழக மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.இராணி ஆகியோர் பங்கேற்பில்; வருகிற ஜனவரி-19 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு 26.01.2026 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணி அளவில் நடைபெறும்.

மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்களான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ்பொய்யாமொழி, எஸ்.ரகுபதி, சி.வி.கணேசன், பூண்டி கே.கலைவாணன், எம்.எல்.ஏ., காடுவெட்டி தியாகராஜன், எம்.எல்.ஏ., க.வைரமணி, க.அன்பழகன், எம்.எல்.ஏ., வீ.ஜெகதீசன், நிவேதா முருகன், எம்.எல்ஏ., கே.கே.செல்லபாண்டியன், என்.கௌதமன், டி.பழனிவேல் அமைச்சர் பெருமக்களான கோவி.செழியன், சிவ வீ.மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா – நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.கல்யாணசுந்தரம், அருண்நேரு, எம்.பி., முரசொலி, எம்.பி., மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இம்மாநாட்டினை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வார்கள். நிறைவாக, தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன், எம்.எல்.ஏ., நன்றியுரையாற்றுகிறார்.

Tags : DMK Delta Zone Women's Conference ,Chennai ,Victory Tamil Women ,Chengippatti, Thanjavur district ,Chief Minister of ,Tamil Nadu ,President ,Principal Secretary ,
× RELATED பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு...