- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- மாநில திட்டமிடல் குழு
- தமிழ்நாடு அரசு
- திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி திணைக்களம்
- உடல் மற்றும் நேர்மறை திணைக்களம்
சென்னை : தமிழ்நாடு மாநிலக் குறிக்காட்டி வரையறை – 2.0 வெளியிட்டு, மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு ஆய்வறிக்கைகளையும் பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை, மாநில திட்டக் குழு, பொருள்இயல் மற்றும் புள்ளி இயல் துறை மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்குகள் ஒருங்கிணைப்பு மையம் ஆகியவற்றுடன் இணைந்து, தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் புதியதாக உருவாக்கப்பட்ட குறிக்காட்டிகளின் தன்மையைக் கருத்தில் கொண்டும், நீடித்த வளர்ச்சி இலக்குகளைக் கண்காணிப்பதில் உலகளாவிய மற்றும் தேசிய அளவில் மாறி வரும் சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க ஏதுவாக, தற்போது நடைமுறையில் உள்ள 2020-ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட மாநிலக் குறிக்காட்டி வரையறை-1.0-ஐ (SIF-1.0) மறுவரையறை செய்துள்ளது. தமிழ்நாடு மாநிலக் குறிக்காட்டி வரையறை-2.0 என்ற பெயரில் இறுதி செய்யப்பட்டுள்ள இந்த வரையறையில் 17 நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான 244 குறிக்காட்டிகள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மாநிலக் குறிக்காட்டி வரையறை-2.0 யை வெளியிட்டார்.
மாநில திட்டக்குழுவின் நான்கு ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தல்
மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட (1) சுற்றுச்சூழல் அமைப்புச் சேவைகளின் பொருளாதார மதிப்பீடு – தமிழ்நாட்டின் முன்னுரிமை அளிக்கப்பட்ட 61 ஈரநிலங்கள்/நீர்நிலைகள் பற்றிய ஆய்வு (2) தமிழ்நாட்டின் புறநகர் பகுதிகளின் அமைப்பு மற்றும் நிலையான புறநகர் மேலாண்மை கட்டமைப்பை மேம்படுத்துதல் (3) முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரமிடுதல் மீதான மதிப்பீட்டாய்வு (4) தமிழ்நாட்டின் வளர் இளம் பெண்களிடையே நீடிக்கும் இரத்த சோகை: செயல்பாட்டு இடைவெளிகளும் பாதிப்புகளும் ஆகிய நான்கு அறிக்கைகளை மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலாளர் திரு. சஜ்ஜன்சிங் ரா. சவான், இ.ஆ.ப., பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையர் திருமதி ஆர். ஜெயா, இ.ஆ.ப., சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசு முதன்மைச் செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் செயலர் திருமதி சு. சுதா, இ.வ.ப., ஐ.நா. பெண்கள் குழுவினர், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் குழுவினர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
