- நீதிமன்றம்
- திருப்பரங்குன்றம்
- தீபம்
- திருப்பரங்குந்தரம் மலை தீபம்
- நீதிபதி
- ஜி ஆர் தீர்ப்பு
- தமிழ்நாடு அரசு
- சுவாமிநாதன்
- திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் மலை தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். சந்தனக்கூடு விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்ற உத்தரவை தடை கேட்டு தர்கா தரப்பு முறையீடு செய்தது. தர்கா தரப்பில் ஐகோர்ட் கிளையில் முறையிட்டபோது, திருப்பரங்குன்றம் வழக்கில் நாளை தீர்ப்பு என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
