×

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்களுக்கு மானியம்

அரியலூர், ஜன.5: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000 வீதமும் 50 கன்னியாஸ்திரிகள் அல்லது அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000 வீதமும் இசிஎஸ் முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கான, விண்ணப்ப படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும், < http://www.bcmbcmw.tn.gov.in/ > என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 28.2.2026க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி, ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால், பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Christians ,Jerusalem ,Ariyalur ,District ,Collector ,Rathinasamy ,Tamil Nadu ,
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்