×

பொன்னமராவதி தாலுகாவில் புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்த முகாம்

பொன்னமராவதி,ஜன.6: பொன்னமராவதி தாலுகாவில் 116வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் 4நாட்கள் நடந்தது. பொன்னமராவதி பகுதியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் முகாம் கடந்த 27 மற்றும் 28ம் தேதிகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 4மற்றும் நேற்றும் இந்த முகாம் நடைபெற்றது. பொன்னமராவதி தாசில்தார் சாந்தா தலைமையில் சமூகப்பாதுகாப்பு திட்ட தாசில்தார் பழனிச்சாமி, துணைத்தாசில்தார்கள் சேகர், திருப்பதிவெங்கடாசலம், ராம்குமார், வருவாய் ஆய்வாளர்கள் சரவணன், ஈஸ்வரி, கார்த்திகா மற்றும் தாலுகா அலுவலர்கள் மேற்பார்வையில் கிராமநிர்வாக அலுவலர்கள், கிராமஉதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், வாக்குச்சாவடி அலுவர்களாக பணியாற்றி 116வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்று வருகின்றது. பொன்னமராவதி தாலுகா பகுதியில் உள்ள 116மையங்களிலும் வாக்காளர்கள் தங்களது பெயர் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள ஆர்வமுடன் வாக்குச்சாவடி சென்று வாக்காளர் பட்டியலை பார்வையிட்டுச் சென்றனர். அனைத்து கட்சி வாக்கு சாவடி முகவர்கள் பார்வையிட்டனர். மேலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளவும், புதிய வாக்காளர்கள் சேர்க்கவும் அனைத்து வாக்குச்சாவடியிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

Tags : Ponnamaravathi taluka ,Ponnamaravathi ,
× RELATED காந்தி சிலை ரவுண்டானா பகுதியில்...