நேபாளத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 55 பயணிகள்: ஓடுதளத்தை விட்டு வெளியேறி ஆற்றுப் படுகையில் நின்ற விமானம்!

காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 8:23 மணிக்கு புத்த ஏர் 901 என்ற விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 51 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 55 பேர் இருந்தனர்.

இரவு சுமார் 9:08 மணியளவில் பத்ராபூர் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தை விட்டு வெளியேறியது. சுமார் 200 மீட்டர் தூரம் புல்வெளியில் சீறிப்பாய்ந்த அந்த விமானம், அங்கிருந்த ஒரு சிறிய ஆற்றின் அருகே சென்று நின்றது.

விமானம் ஓடுதளத்தை விட்டு வெளியேறியதால் பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், விமானத்தில் இருந்த 55 பேரும் காயமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானத்திற்குச் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து நேபாள சிவில் ஏவியேஷன் ஆணையம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமா அல்லது மோசமான வானிலை காரணமா என்பது குறித்து தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: