×

சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்

தேனி, ஜன. 3: தேனி புதிய பஸ்நிலைய பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன. தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாத விழா கடைபிடிக்கப்பட உள்ளது.

இதனையடுத்து, தேனி மாவட்டத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தேனி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிலையங்களில், தேனி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் ஓட்டுனர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள் குறித்து விளக்கப்பட்டிருந்தது.

 

Tags : Safety Month ,Theni ,Regional Transport Office ,Tamil Nadu Transport Department ,Tamil Nadu ,
× RELATED குன்னூர் – கோத்தகிரி சாலையில் கார் கவிழ்ந்து விபத்து