- பல்லடம்
- பணிக்கம்பட்டி பிரிவு
- பல்லடம்-செட்டிப்பாளையம்
- ஆலூத்துப்பாளையம்
- பல்லடம்-தாராபுரம்
- பல்லடம் நெடுஞ்சாலை துணைப்பிரிவு
பல்லடம், ஜன.3: பல்லடம்- செட்டிபாளையம் சாலையில் பணிக்கம்பட்டி பிரிவு முதல் பல்லடம்- தாராபுரம் சாலையில் ஆலூத்துபாளையம் பிரிவு வரை ரூ.54 கோடி மதிப்பில் 7.60 கி.மீ தூரத்திற்கு புதிய இணைப்பு சாலை அமைக்கும் பணி, பல்லடம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் மேற்பார்வையில் கடந்த 2 மாதங்களாக துரிதமாக நடந்து வருகிறது.
தற்போது இந்த இணைப்புச் சாலை பணி, நீட்டிக்கப்பட்டு ஆலுத்துபாளையம் முதல் தேசிய நெடுஞ்சாலையின் அருகே அமைந்திருக்கும் மாதப்பூர் சாலையில் இணையும் வகையில் ெதாடங்கப்பட்டு உள்ளது. இந்த இணைப்புச் சாலையின் தொடர்ச்சியாக பணிக்கம்பட்டியில் இருந்து பிரிந்து செம்மிபாளையம் பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் இணையும் இதர மாவட்ட சாலையான வெங்கிடாபுரம் காளிபாளையம் சாலையை இரண்டு வழித்தடமாக மேம்படுத்தி, நெடுஞ்சாலைத்துறை மூலம் பணிகள் துரிதமாக நடைபெற்று வடுகிறது.
இந்த 3 பணிகளும் முடிவடையும்போது, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செம்பிபாளையம் பிரிவில் இருந்து மாதப்பூர் வரை இணைப்பு சாலை செயல்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
