மஞ்சூர், ஜன.3: ஊட்டி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தற்போதைய எம்எல்ஏ கணேஷ், ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் ஆகியோர் விருப்ப மனு அளித்தார்கள். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது கட்சியினரிடம் விருப்ப மனு பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் உள்ள 3 சட்ட மன்ற தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெற்று வருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் தற்போதைய ஊட்டி எம்எல்ஏவுமான கணேஷ் மற்றும் மாநில காங்கிரஸ் கட்சி செயலாளரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான நாகராஜ் ஆகியோர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கட்சி பொதுச்செயலாளர்கள் செல்வம்,வாசு ஆகியோரிடம் விருப்ப மனு அளித்தார்.
