×

உயர் படிப்பு படித்தவர்கள் தேச விரோத செயல்களில் ஈடுபடும் ஆபத்தான போக்கு: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கவலை

உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இன்று, நாட்டில் வெள்ளை காலர் தீவிரவாதத்தின் ஒரு ஆபத்தான போக்கு உருவாகி வருகிறது. உயர் கல்வி கற்றவர்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் எதிராக செயல்படுகிறார்கள்.டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் மருத்துவர்கள். மருந்துச் சீட்டுகளில் ஆர் எக்ஸ் என்று எழுதும் மருத்துவர்கள், தங்கள் கைகளில் ஆர்டிஎக்ஸ் வைத்திருக்கின்றனர். கல்வியுடன் மதிப்புகள் மற்றும் பண்புகளுடன் அறிவு இருக்க வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது. தீவிரவாதிகள் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி பட்டங்களைப் பெற்றிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு ஞானம் இல்லாததால் அவர்கள் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்றார்.

Tags : Defence Minister ,Rajnath Singh ,Udaipur ,Udaipur, Rajasthan ,Delhi Red Fort… ,
× RELATED டெல்லியில் நாளை புத்தர் கண்காட்சியை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!