×

டெல்லியில் நாளை புத்தர் கண்காட்சியை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி: புத்தர் தொடர்பான புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்களின் ‘ஒளியும் தாமரையும்: ஞானம் பெற்றவரின் நினைவுச்சின்னங்கள்’ என்ற மாபெரும் சர்வதேசக் கண்காட்சி டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “நாளை – வரலாறு, கலாச்சாரம் மற்றும் பகவான் புத்தரின் கொள்கைகள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு மிகச் சிறப்பான நாள். புத்தரின் உன்னதமான சிந்தனைகளை மேலும் பிரபலப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு இணங்க அமைந்துள்ளது.

இது நமது இளைஞர்களுக்கும் நமது செழுமையான கலாச்சாரத்திற்கும் இடையிலான பிணைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான ஒரு முயற்சியும் ஆகும். இந்த நினைவுச்சின்னங்களைத் தாயகம் கொண்டுவர உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Tags : Modi ,Buddha ,Delhi ,Bibrahwa ,
× RELATED ஷாருக்கான் கேகேஆர் அணிக்காக வங்கதேச...