புதுடெல்லி: ஒன்றிய வர்த்தகதுறை கூடுதல் செயலாளர் அஜய் பாது கூறுகையில்,‘‘ ஏற்றுமதியாளர்களின் கடன் அணுகலை மேம்படுத்துவதற்காக ரூ.5181 கோடி வட்டி மானிய திட்டம், ரூ.2114 கோடி பிணைய ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கிய ரூ.7295 கோடி ஏற்றுமதி ஆதரவு தொகுப்பை ஒன்றிய அரசு வழங்க உள்ளது. இந்த நடவடிக்கைகள் 2025-31 வரை ஆறு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். இந்த திட்டம் ஏற்றுமதியாளர்களின் வர்த்தக நிதி பிரச்னைகளை நிவர்த்தி செய்யும். வட்டி மானிய திட்டத்தின் கீழ் ஏற்றுமதியாளர்கள் கடனில் மானியம் பெறுவார்கள் ’’ என்றார்.
