×

இலங்கை கடற்படை அட்டூழியம் : கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த 11 தமிழக மீனவர்கள் கைது!!

கச்சத்தீவு : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 11 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மீனவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம், புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது தமிழக மீனவர்கள் அநியாயமாக கைது செய்யப்படுவது வழக்கம். அது போல் அவர்களது படகுகளை சேதப்படுத்துவது, வலைகளை அறுப்பது உள்ளிட்ட செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்

இந்த நிலையில், புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்தஷ காசாக்குடி மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், 30.12.2025 அன்று காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 11 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், காரை நகர் கடல் பரப்பில் மீன் பிடித்ததாக கூறி, மீனவர்கள் 11 பேரையும் கைது செய்தனர்.

மேலும் விசைப்படகையும் பறிமுதல் செய்து, மீனவர்களை காங்கேசன் துறை முகத்திற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் கைதான சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போல் மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து கொண்டே இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sri Lanka Navy ,Kachativu Kachativu ,Sri Lankan Navy ,Kachativu ,Tamil Nadu ,Puduwa ,
× RELATED கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன பேருந்தில் பயங்கர தீ விபத்து!!