சென்னை: மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் காளைகளுக்கு மருத்துவ சான்றிதழ் தரும் பணி தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. ஜனவரி .15ல் அவனியாபுரத்தில், 16ம் தேதி பாலமேட்டில், 17ம் தேதி அலங்காநல்லூரில் ஐல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. கால்நடை மருத்துவமனைக்கு நேரடியாக காளைகளை அழைத்து வந்து உரிமையாளர்கள் மருத்துவ சான்றிதழை பெறுகின்றனர்.
