திருச்சி: போதைப் பொருள் புழக்கம் என்பது மிகப்பெரிய நெட்வொர்க்; போதைப்பொருள் நெட்வொர்க்கை ஒழிக்க மாநில அரசும், ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போதையின் பாதையில் இருந்து மாணவர்களைக் காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப் பொருளைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார்.
