தஞ்சை : சிங்கப்பூரைச் சேர்ந்த மூதாட்டியின் ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துகளை மோசடி செய்து அபகரித்த புகாரில் அதிமுக அம்மா பேரவை நிர்வாகி செந்தில்குமார் உள்ளிட்ட 12 பேர் மீது தஞ்சாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மறைந்த கணவரின் சொத்துகளை பராமரிப்பதாகக் கூறி ஏமாற்றி போலி ஆவணங்கள் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
