டெல்லி : சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 8% முதல் 279% வரை கூடுதல் வரி விதிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஒன்றிய அமைச்சகம். இதன்படி ஒரு சிகரெட்டின் விலை ரூ.72க்கு விற்கப்படலாம். புதிய மசோதாவின்படி, மெல்லும் புகையிலைக்கான வரியும் 25%லிருந்து 82%ஆக உயர உள்ளது. புதிய மசோதாவின்படி ஹூக்கா புகையிலைக்கான வரி 25%லிருந்து 33%ஆக உயருகிறது. புதிய மாசோதாவின்படி, குட்கா பொருட்களுக்கான வரி 90%ஆக உயருகிறது.
