×

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு: 2026ஐ கொண்டாட்டத்துடன் வரவேற்கும் மக்கள்

வெலிங்டன்: உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் 2026 புத்தாண்டு பிறந்தது. 2025 ஆம் ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 2026 ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று நியூசிலாந்தின் ஆக்லாந்து, வெலிடங்டன் நகரங்களில் உற்சாக கொண்டாட்டம். புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர். இரவு 12 மணிக்கே புத்தாண்டு பிறக்கிறது என்றாலும் உலகம் முழுவதும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதன் காரணமாக சில நாடுகள் முதலாவதாகவும், சில நாடுகள் தாமதமாகவும் புத்தாண்டு பிறக்கிறது. அந்த வகையில், கிரிபாட்டி [Kiritimati] தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது. அடுத்து ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. ஆக்லாந்தின் ஸ்கை டவரில் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டை நியூசிலாந்து மக்கள் வரவேற்றனர்.

இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணியளவில் கிரிபாட்டி தீவில் 2026 ஆம் வருடம் பிறந்துள்ளது. அதனை தொடர்நது உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. ஆக்லாந்து நகரில் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்று நியூசிலாந்து மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. பல நகரங்களில் இன்று மாலை முதலே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிடும்.

Tags : New Year ,New Zealand ,Wellington ,Auckland ,Weldington ,
× RELATED எடப்பாடியின் முகவர்போல் அன்புமணி...