×

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6-ந்தேதி அமைச்சரவைக் கூட்டம்!!

சென்னை : தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனவரி 20ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில், முக்கிய ஆலோசனை நடத்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. 2026ம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடா் வரும் ஜன. 20ம் தேதி ஆளுநா் உரையுடன் தொடங்கவுள்ளதாக பேரவைத் தலைவா் அப்பாவு தெரிவித்தாா்.

இதையடுத்து ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசனை நடத்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் கோரிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் ஓய்வூதியத் திட்டங்கள் தொடர்பாக ககன்தீப் சிங் பேடி குழு முதலமைச்சரிடம் அளித்த இறுதி அறிக்கை குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Chief Minister ,Tamil Nadu ,-th Cabinet Meeting ,Stalin ,Chennai ,Tamil Nadu Cabinet ,Chief Secretariat ,K. ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,00,400-க்கு விற்பனை!