×

உலகின் முதல் நாடாக 2026 புத்தாண்டை வரவேற்ற கிரிபாட்டி தீவு : மக்கள் உற்சாகம்

கிரிபாட்டி : பசிபிங் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு பிறந்துவிட்டது. பசிபிங் பெருங்கடலில் உள்ள இந்த தீவு தான் உலகின் முதல் நாடாக ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை கொண்டாடி வருகிறது. இந்திய நேரத்தை காட்டிலும் 8.5 மணி நேரம் முன்னதாக அங்கு 2026ம் ஆண்டு பிறந்துவிட்டது. கிறிஸ்துமஸ் தீவு என்று அழைக்கப்படும் இந்தத் தீவு, ஹவாய் தீவுக்குத் தெற்கிலும், ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கிலும் அமைந்துள்ளது. இந்திய நேரப்படி 3.30 மணியளவில் கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது. அங்குள்ள பொதுமக்கள் புத்தாண்டைக் கொண்டாடி வரவேற்றனர்.

இன்னும், சற்று நேரத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டு பிறக்கிறது.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், இந்தியாவிற்கு முன்னதாக அடுத்தடுத்து புத்தாண்டை கொண்டாட உள்ளன.இந்நிலையில் உலகிலேயே கடைசியாக புத்தாண்டை வரவேற்கும் நாடுகள் யார் என்று பார்த்தால் அமெரிக்கா தான். அமெரிக்காவிற்கு சொந்தமான ஹவ்லேண்ட் மற்றும் பாகெர் தீவுகள் தான் கிரீன்விச் சராசரி நேரத்துடன் ஒப்பிடுகையில் கிழக்கில் இருந்து மேற்காக கடைசி இடத்தில் அமைந்துள்ளன.

Tags : Kiribati Island ,New Year ,Kiribati ,Pacific Ocean ,
× RELATED எடப்பாடியின் முகவர்போல் அன்புமணி...