×

9 ஆண்டு கால ‘லிவ்-இன்’ உறவு முறிந்தது; 69 வயது நடிகரை பிரிந்த 35 வயது காதலி: ஹாலிவுட்டில் பரபரப்பு

 

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் மெல் கிப்சன் மற்றும் அவரது நீண்ட கால காதலி ரோசலின்ட் ரோஸ் ஆகியோர் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் மெல் கிப்சன் (69) மற்றும் 35 வயதான எழுத்தாளர் ரோசலின்ட் ரோஸ் ஆகியோர் கடந்த 2014ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இவர்களுக்கு இடையே 34 வயது வித்தியாசம் இருந்தும், கடந்த 9 ஆண்டுகளாக ஒன்றாக ‘லிவ்-இன்’ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நேற்று இருவரும் பிரிவதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘எங்கள் வாழ்க்கையின் இந்த அத்தியாயம் முடிவடைவது வருத்தமளிக்கிறது என்றாலும், எங்களுக்கு ஒரு அழகான மகன் இருக்கிறான், அவனுக்கு சிறந்த பெற்றோராகத் தொடர்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் இவர்கள் ஓராண்டிற்கு முன்பே ரகசியமாக பிரிந்துவிட்டதாகவும், தற்போதுதான் அதை வெளியில் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தம்பதிக்கு லார்ஸ் என்ற 8 வயது மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இயல்பாகவே பிரிந்துள்ளதாகவும், இதில் வேறு எந்த சர்ச்சையும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இவர்களது 14.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீடு எரிந்து நாசமானது. அப்போது மெல் கிப்சன் வெளியூரில் இருந்தாலும், ரோஸ் மற்றும் மகனை பத்திரமாக மீட்க ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மெல் கிப்சனுக்கு ஏற்கனவே வேறு மனைவிகள் மூலம் 8 குழந்தைகள் உள்ளனர். தற்போது அவர் ‘தி ரிசரக்ஷன் ஆஃப் தி கிரைஸ்ட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Los Angeles ,Hollywood ,Mel Gibson ,Rosalind Rose ,
× RELATED நியூசிலாந்து அருகே உள்ள சதம் தீவில் ஆங்கில புத்தாண்டு 2026 பிறந்தது