×

மாமல்லபுரம், ஈசிஆர் பகுதியில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சி நடத்தக்கூடாது: நட்சத்திர விடுதி மேலாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

சென்னை: மாமல்லபுரம், ஈசிஆர் பகுதியில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சி நடத்தக்கூடாது என நட்சத்திர விடுதி மேலாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு

ஆங்கில புத்தாண்டை ஒட்டி நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

நட்சத்திர விடுதி மேலாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

மாமல்லபுரம் மற்றும் ஈசிஆர் சாலை பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல், விடுதி மேலாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல் வழங்கியது. நட்சத்திர ஓட்டல், விடுதி, பண்ணை வீடுகளின் இயக்குநர்கள், உரிமையாளர்களை அழைத்து காவல்துறை ஆலோசனை நடத்தியது. இன்று மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதிக்கக் கூடாது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் கடற்கரை செல்ல, கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கேளிக்கை நிகழ்ச்சிக்கு வருவோரை ஆதார் உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணம் பெற்றே அனுமதிக்கவேண்டும். அறை எடுத்து தங்குவோரின் செல்போன் எண் விடுதி பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியது.

Tags : New Year's ,Mamallapuram, ECR ,Chennai ,New Year's Eve ,Mamallapuram, ,ECR ,
× RELATED தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உறுதியேற்போம்: வைகோ வலியுறுத்தல்