×

ஜெர்மன் வங்கியில் ரூ.317 கோடி கொள்ளை

கெல்சென்கிர்சென்,டிச.31: ஜெர்மன் வங்கியை துளையிட்டு பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, ரூ.317 கோடியை கொள்ளையடித்து தப்பியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேற்கு ஜெர்மனியின் கெல்சென்கிர்சென் நகரில் உள்ள ஒரு வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்திற்குள் கொள்ளையர்கள் துளையிட்டு நுழைந்தனர்.

அவர்கள் சுமார் 35 மில்லியன் டாலர் (சுமார் 317 கோடி ரூபாய்) மதிப்புள்ள ரொக்கம் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடிச் சென்றனர். பணம், தங்கம் மற்றும் நகைகள் இருந்த 3,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பெட்டகங்களை உடைத்து தப்பிச்சென்றுள்ளது ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Gelsenkirchen ,western German ,
× RELATED உக்ரைன் திடீர் மறுப்பு ரஷ்ய அதிபர்...