சென்னை: ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டு அரசுப் பேருந்துகளை இயக்கக் கூடாது. அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும்போது தங்களது செல்போனை நடத்துநர்களிடம் கொடுக்க வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
