முன்னாள் MLA பல்பாக்கி கிருஷ்ணன் என்பவரை அதிமுகவில் இருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவு

சென்னை: செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் நேற்று இணைந்த நிலையில், முன்னாள் MLA பல்பாக்கி கிருஷ்ணன் என்பவரை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்பாக்கி சி. கிருஷ்ணன் Ex.MLA (சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: