×

உடல் நலக்குறைவால் இறந்த முதியவரின் உடல் தானம்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப்பாக்கத்தில் வசித்து வருபவர் ரகுராமன். இவரது தந்தை ராஜசேகரன் (93). இவர் சோத்துப்பாக்கம் திரு.வி.க.நகர் பகுதியில் அவரது வீட்டில் சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ராஜசேகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராஜசேகரின் உடலை அவரது மகன் மற்றும் மகள்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மருத்துவப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக உடல்தானம் வழங்க திட்டமிட்டிருந்தனர். திட்டமிட்டபடி உயிரிழந்த தனது தந்தை ராஜசேகரனின் உடலை நேற்று செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி உடல்கூற்று இயல்துறை இணை பேராசிரியர்கள் செந்தில்குமார் மற்றும் விண்ணரசி ஆகியோரது முன்னிலையில் அவரது பிள்ளைகள் கண்ணீர் மல்க தந்தை ராஜசேகரனின் உடலை ஒப்படைத்தனர்

Tags : Chennai ,Raghuram ,Sothuppakkam, Chengalpattu district ,Rajasekaran ,Sothuppakkam Thiru.V.K. Nagar ,
× RELATED பள்ளி விடுமுறையால் படையெடுப்பு...