சென்னை: சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-195, ராஜிவ்காந்தி சாலையில் உள்ள வார்டு அலுவலக வளாகத்தில், மேயரின் மேம்பாட்டு நிதி ரூ.54.50 லட்சத்தில், 1,078 சதுரடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தை, மேயர் பிரியா நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல், மண்டலக்குழு தலைவர் மதியழகன், மாமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
