- உளுந்தூர்பேட்டை
- கந்தசாமி
- பாலாஜி
- கொத்தனூர்
- Vepur
- விருத்தாசலம்
- கடலூர் மாவட்டம்
- சென்னை
- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
உளுந்தூர்பேட்டை: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் வேப்பூர் அருகே கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கந்தசாமி(29), பாலாஜி(32). இருவரும் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் விருத்தாசலம் நோக்கி சென்றுள்ளனர்.
ரயிலில் அதிக கூட்டம் இருந்ததால் இருவரும் படிக்கட்டு அருகில் உட்கார்ந்து சென்றனர். உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி என்ற இடத்தின் அருகில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, ரயிலில் இருந்து இருவரும் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தது, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
