×

இந்தாண்டின் முதல் போட்டி தச்சங்குறிச்சியில் ஜன. 3ல் ஜல்லிக்கட்டு: ஏற்பாடுகள் தீவிரம்

 

புதுக்கோட்டை: இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் வரும் ஜன. 3ம் தேதி நடைபெற உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. தை மாதத்தில் இருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக அளவில் பிரசித்தி பெற்றவை.

இந்நிலையில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் வரும் ஜன. 3ம் தேதி நடைபெற உள்ளது. தச்சங்குறிச்சியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டு, விழா கமிட்டி சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி தச்சங்குறிச்சியில் நேற்று நடந்தது. இதில் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர், பொது மக்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து வாடிவாசல், கேலரி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வினியோகமும் இணையதளம் மூலம் துவங்கி உள்ளது. இந்தாண்டின் முதல் போட்டியில் களமிறங்க காளைகள் மற்றும் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

Tags : Thachankurichi ,Jallikattu ,Pudukottai ,Tamil Nadu ,Thai ,Madurai district ,Avaniyapuram ,Palamedu ,
× RELATED தூத்துக்குடி அருகே சாலை விபத்தில்...