கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரத்தை, தாய்லாந்து வீரர்களின் இழப்புகளோடு ஒப்பிட முடியாது என தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் கருத்து தெரிவித்துள்ளார். அதை ஒரு அவமதிப்பாக கருதக் கூடாது எனவும், கம்போடியா உடனான தங்களின் இருதரப்புப் பிரச்னையில் இந்தியா தலையிடக் கூடாது என மறைமுகமாகவும் பேசியுள்ளார்.
