சிவகாசி: சிவகாசியில் குடும்பத் தகராறில் மனைவி, 2 குழந்தைகள், மாமியார் மீது தீ வைத்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. மனைவி அலி பாத்திமா, சிக்கந்தர் பீவி உயிரிழந்த நிலையில் எரித்துக் கொல்ல முயன்ற அக்பர் அலியும் உயிரிழந்தார். படுகாயமடைந்த அக்பர் அலியின் மகன்கள் பர்வீன், பாரூக் இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
